உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4 பிரிவுகளில் இந்த துறையும் ஒன்றாகும்.
1. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் தலைமையிலான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.
2. காவல் துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு.
3.காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் (என்ஐபி).
4. நிர்வாக இயக்குநர் தலைமையிலான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் லிமிடெட் (TASMAC). தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ன் பல்வேறு விதிகள் மற்றும் மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 54ன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. மேலும்...